உங்ககிட்ட இருக்கா?.... “வாட்ஸ்அப் பிசின்ஸ்” செயலி


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாதவர்களே இல்லை. மெசேஜ், டாக்குமெண்ட், வீடியோ காலிங், பேமண்ட் என பல விஷயங்கள் இருக்கிறது என்றாலும் பிசினஸ் செய்பவர்களும் வாட்ஸ்அப் யை அதிக அளவில் பயன்படுத்திக்கொண்டு தான் வருகிறார்கள். நிறைய பிசினஸ்கள் வாட்ஸ்அப் மூலம் தான் இயங்கி வருகிறது என்கிற விஷயத்தை தெரிந்துகொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் “பிசினஸ் வாட்ஸ்அப்” என்கிற புதிய செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

டவுன்லோடு செய்வது எப்படி?..
கூகுள் “பிளேஸ்டோர்” க்கு சென்று whatsapp business என்று டைப் செய்தால் செயலியின் விவரம் வரும், இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

இதன் பயன்பாடு என்ன?
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யும் வசதியும், வாடிக்கையாளர்களை தனித்தனியாக பிரித்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
நிறுவனத்தின் விவரங்களையும், வரைபடத்தையும் Profile யில் பதிவு செய்துகொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களை எழுதில் கவர முடியும்.
வாடிக்கையாளர்களுக்கு உடனடி பதில்களும், வாழ்த்துச் செய்திகளையும் அனுப்பலாம். பிசியாக இருந்தால் “Away” மெசேஜ் அனுப்பும் வசதியும் இருக்கிறது.

அதே நம்பரில் பயன்படுத்த முடியுமா?.
ஏற்கனவே வாட்ஸ்அப் மெசன்ஜர் யை பயன்படுத்துபவர்களாக இருந்தால், அதே நம்பரில் பிசினஸ் வாட்ஸ்அப் யை இணைத்துக்கொள்ளலாம். மெசன்ஜரில் இருக்கும் பழைய மேசேஜ்களை பேக்அப் செய்துகொண்டு வாட்ஸ்அப் பிசினஸ் ஆக்டிவேட் செய்துகொள்வது சிறந்த வழி.
பிசினஸையும், குடும்பத்தையும் ஒரே செயலியில் பயன்படுத்திக்கொள்ளும் வசதி தான் இந்த பிசினஸ் வாட்ஸ்அப். இந்தியாவில் 80% சிறிய பிசினஸ் வெற்றிக்கு வாட்ஸ்அப் செயலி அதிகமாக பயன்படுகிறது என்று Morning Consult study சர்வே ஒருபக்கம் சொல்கிறது..